அது ஒரு உண்மை கண்டறியும நாற்காலி.
அதில் அமர்பவர் உண்மையைப் பேசினால் பச்சை விளக்கு எரியும்.
பொய் சொன்னால் சிவப்பு விளக்கு எரியும்.
அவன் அமர்கிறான்.
காதலி கேட்கிறாள்...
நீ என்னைக் காதலிக்கிறாயா..
அவன் கூறுகிறான்
ஆமாம் ( சிவப்பு விளக்கு எரிகிறது )
கவலைப்படாதே.. கடவுள் ஏதாவது தவறு செய்திருக்கலாம்.
மீண்டும் ஒருமுறை கேட்கிறேன்.என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
நீ என்னைக் காதலிக்கிறாயா...
மறுபடியும் கேட்கிறாள்.
அவனது பதில்..
ஆமாம் ( இப்போது பச்சை விளக்கு எரிகிறது )
என்ன நடந்தது தெரியுமா..
முதலில் அவள் கேட்டபோது அவன் மனதில் காதல் இல்லை
அதனால் சிவப்பு விளக்கு எரிந்தது.
ஆனால் இரண்டாவது முறை அவள் கேட்டபோது
தன் காதலன் மீதான நம்பிக்கையை அவள் வெளிப்படுத்தினாள்.
அப்போது அவன் மனதில் உண்மையாகவே காதல் துளிர்த்தது.
அதனால்தான் பச்சை விளக்கு எரிந்தது.
இதுதான் காதல்.
(படித்ததில் பிடித்தது)
No comments:
Post a Comment