இன்னும்
நினைத்துக் கொண்டிருப்பது
சாத்தியமில்லைதான்
அழும் குழந்தைக்கு
பால் கொடுக்க
அடுப்பெரிக்க
அவரைக் கவனிக்க
அவசர அவசரமாய்
அலுவலகம் புறப்பட
என
நொடிமுள்ளாய்
துடித்துக் கொண்டிருக்கும்
நேரங்களில்
போன கதை
ஞாபகம் வராதுதான்..
முற்றுப்புள்ளிக்கு
அடுத்துதான்
அடுத்த வாக்கியமே
என்று சொன்ன
தமிழாசிரியர் வார்த்தை
அன்று புரிந்ததில்லை
இன்று புரிகிறது
உனக்குத் தெரிந்ததை
நீ எழுது
எனக்குத் தெரிந்த
கவிதையை
நான் எழுதுகிறேன்
No comments:
Post a Comment