Sunday, March 18, 2012

life to love



I trust you


is a better compliment than

I love you....

because -

you may not always

trust the person you love,

but you can always love the

person you trust...


Thursday, March 8, 2012

hhmmmm...


அவன் தன் காதலிக்கு ஒரு போட்டி வைத்தான்.

ஒரு நாள் முழுவதும் உன்னால் என்னுடன் பேசாமல் இருக்க முடியுமா..

போனில் பேசக்கூடாது.. எஸ்எம்எஸ் அனுப்பக்கூடாது...

இதில் நீ வெற்றி பெற்றுவிட்டால்

காலமெல்லாம் உன்னை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன்.

அவள் ஏற்றுக்கொண்டாள்.

அந்த நாள் முழுவதும் அவள் அவனைத் தொடர்பு கொள்ளவில்லை.

பாவம், அவளுக்குத் தெரியாது..

சில மணி நேரங்களில் அவன் இறந்துவிடப்போகிறான் என்பது.

காரணம், அவனுக்கு புற்று நோய்.

மறுநாள் காலை அவன் அறைக்கு அவள் சென்றாள்.

சவப்பெட்டியில் அவன் உடல் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

அதிர்ந்து போனாள்.

அருகில் இருந்த மேஜையில் அவளுக்கு ஒரு கடிதம் காத்திருந்தது.

அதில்,

கண்ணே... நீ வெற்றி பெற்று விட்டாய்..

காலமெல்லாம் இப்படியே இருந்து விடு.

விடைபெறுகிறேன்

என்று எழுதியிருந்தது.

what a scene..

அதனால்....



நல்லது.
உன் தேடல் மறைக்கப்படுவது..

நல்லது
உன் ஆசைகள் நிதானிப்பது...

நல்லது
உன் கனவுகள் வீணாவது...

நல்லது
உன் ஏக்கம் பொய்களில் கரைந்து போவது

நல்லது
பீறிட்டெழும் உன் உணர்வுகள் அடக்கப்படுவது

நல்லது
காதலை காமமாக எண்ணி ஒடுங்கிப்போவது

நல்லது
தொலைக்க விரும்பினாலும் தொடர்வது

நல்லது
தேடக்கூடாது என்ற கவலையோடு தேடுவது

நல்லது
இடைவெளிக்குள் இதம் காண்பது

நல்லது
வெளிச்சத்தில் இருட்டை ரசிப்பது

நல்லது
வெளிப்படுத்துவதைவிட ஒளிக்கத் தடுமாறுவது

நல்லதுதான்
நாலு பேருக்காக
சவமாகவே வாழ்ந்து பழகுவதும் கூட.

சிரிப்பதில் வழியும்
கவ்லையும்....
வார்த்தைகளில் மறையும்
ஏக்கமும்....


தேட வைக்கும் பாவங்கள்.
அதையா செய்யச் சொல்கிறாய்..